Header Ads

  • சற்று முன்

    கண்ணமங்கலம் உள்ளிட்ட 3 இடங்களில் முதல்வர் குறை தீர்க்கும் முகாம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் நடைப் பெற்றது


    கண்ணமங்கலம் பேரூராட்சி மன்ற திடல், வண்ணாங்குளம் கிராமத்தில் தர்மராஜா கோவில் திடல் மற்றும் ஒண்ணுபுரம் கிராமத்தில் நடுத்தெரு ஆகிய 3 இடங்களில் நேற்று முதல் - அமைச்சரின் மக்கள் குறைதீர்வு திட்ட முகாம் மாவட்ட கலெக்டர் கந்தசாமி தலைமையில் நடந்தது. அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தூசி கே.மோகன், அரசு உதவி வழக்கறிஞர் சங்கர், திருவண்ணாமலை ஆவின் துணைத்தலைவர் பாரிபாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆரணி தாசில்தார் தியாகராஜன் வரவேற்றார். முகாம்களில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்துகொண்டு, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பேசுகையில், ஒரு மாதத்தில் நீங்கள் தரும் கோரிக்கை மனுக்கள் மீது தீர்வு கிடைக்கும். தமிழகத்தில் விடுபட்ட சுமார் 5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை மீண்டும் வழங்கப்பட உள்ளது. ஆரணி சட்டமன்ற தொகுதியில் 2,500 பயனாளிகளுக்கு வழங்கப்படும். உங்களின் கோரிக்கை மனு மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தகவல் தெரிவிக்கப்படும். கண்ணமங்கலம் பேரூராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டம் ரூ.10 கோடி செலவில் செயல்படுத்தப்பட உள்ளது’ என்றார்.

    இதில் கண்ணமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் லோகநாதன், வருவாய் ஆய்வாளர் சுபிசந்தர், முன்னாள் கவுன்சிலர்கள் திருமால், சுரேஷ், ரவி, கோபி, வசந்தராஜ், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வேலு, நகர செயலாளர் பாண்டியன், ஒண்ணுபுரம் கிளை செயலாளர் சரவணன், கிராம நிர்வாக அலுவலர்கள் பிரசாத், ரமேஷ், குப்பன், பொன்னி, பொற்கொடி, சரவணன், ஜேம்ஸ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் மக்கள் தொடர்பு அலுவலர் முத்தமிழ் செல்வன் நன்றி கூறினார்.

    கண்ணமங்கலம் பேரூராட்சி மன்ற திடலில் நடந்த முகாமில் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் மேடையில் நின்றபடி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். அப்போது பொதுமக்கள் ஒருவரையொருவர் முந்திச்சென்று மனு கொடுக்க முயன்ற போது தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் சில பெண்கள் கூட்ட நெரிசலில் சிக்கி கீழே விழுந்தனர். உடனடியாக அருகில் இருந்தவர்கள் மீட்டு வெளியே அழைத்து வந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


    செய்தியாளர் : திருவண்ணாமலை  - மூர்த்தி 




    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad