திருவாடானையில் குடிநீர் பிரச்சினையை கண்டித்து தமிழர் தேசிய கட்சி சேர்ந்த நிர்வாகிகள் திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போது காவல்துறையினர் கைது செய்து விசாரித்தார்கள்
திருவாடானை தாலுகா திருவாடானையில் குடிநீர் பிரச்சினையை கண்டித்து தமிழர் தேசிய கட்சி சேர்ந்த நிர்வாகிகள் உறுப்பினர்கள் 50க்கும் மேற்பட்டோர் திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற போது காவல்துறையினர் கைது செய்து விசாரித்தார்கள்.
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா, திருவாடானை அதன் சுற்றியுள்ள கிராமங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறி தமிழ் தேசிய கட்சி சார்பாக அதன் தலைவர் தமிழ்த் தேசிய கட்சி தலைவர் தழிழ்நேசன் தலைமையிலும், மாவட்ட செயலாளர் கார்த்திக், மாவட்ட தலைவர் முத்துக் ருமார், மற்றும் பார்த்திபன் முன்னிலையில் திருவாடானை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தினை முற்றுகையிட முயன்று கோசங்கள் எழுப்பினார்கள், ஊராட்சி செயலாளர்கள் கையூட்டு பெற்றுக் கொண்டு குடிநீர் வழங்குவதில் பாரபட்சம் பார்க்கின்றர். அதை அலுவலர்களிடம் கூறியும் நடிக்கை எடுக்க வில்லை என்று கோசங்கள் எழுப்பினார்கள். இதற்கு போலீஸ் அனுமதி வாங்கவில்லை என்பதால் அனைவரைபும் கைது செய்து தனியார் மஹாலில் தங்க வைத்தனர் . இந்த ஆர்பாட்டத்தில் ஏராளமான கட்சி நிர்வாசிகள், உறுப்பினர்கள், பெண்கள் பலர் கலந்து கொண்டார்கள்.
கருத்துகள் இல்லை