திருவாடானை அருள்மிகு சிநேகவல்லி அம்மன் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் ஆடி உற்சவ விழாவை முன்னிட்டு திருகல்யாணம் வைபவம்
திருவாடானை அருள்மிகு சிநேகவல்லி அம்மன் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் ஆடி உற்சவ விழாவை முன்னிட்டு திருகல்யாணம் வைபவம் அதிவிமர்சையாக நடைபெற்றது நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவாடானை அருள்மிகு சிநேகவல்லி அம்மன் சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் ஆடி உற்சவ விழா கடந்த ஜூலை 26ம் தேதி கொடியேற்றத்துட்ன் துவங்கியது. அன்று முதல் சிநேகவல்லி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆரானைகளும் அம்மன் அன்னம், கிளி, ரிஷபம், குதிரை என பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 9ம் நாள் திருவிழாவாக தேரோட்டம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து திங்கள் கிழமை திருக்கலயாணம் நடைபெற்றது. அதற்கு முன் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மாள் தபசு நடைபெற்றது. அதனை தொடர்ந்து பர்வதராஜனின் மகளான பார்வதி ஈசனை மணக்கும் நிகழ்வு திருக்கல்யாணமாக ஒவவோர் கோவிலிலும் நடைபெறுகிறது. திருகல்யாண வைபவத்திற்கு முன்பாக அம்மன் ஆராட்டு நிகழ்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து அம்மன் ஊஞ்சல் ஆடும் நிகழ்வினை தொடர்ந்து மாங்கள்யத்தை வைத்து யாகசாலை பூஜை நடைபெற்றது. அடுத்ததாக திருக்கல்யாண வைபவம் அதிவிமர்சையாக நடைபெற்றது. பின் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றதை தொடர்ந்து சுவாமிக்கு தீப ஆராதனை காட்டப்பட்டது. அப்பொழுது ஏராளமான பெண்கள் பரவசத்துடன் வழிபட்டார்கள்,. திருக்கல்யாண வைபவத்தில் இந்த திருக்கல்யாண வைபத்தில் திருவாடானை நீதிபதி பாலமுருகன,
திவான்.பழனிவேல் பாண்டியன், மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டடார்கள். கோவில் நிர்வாகம் மற்றும் நன்கொடையாளர் அண்ணதானம் ஏற்பாடுகள் செய்திருந்தார்கள்.
செய்தியாளர் : திருவாடானை தாலுகா Lv.ஆனந்த்
கருத்துகள் இல்லை