Header Ads

  • சற்று முன்

    செங்கம் அருகே முன்விரோத காரணமாக மூன்று பசுமாடுகளுக்கு உணவில் விஷம் கலந்து கொன்றதாக காவல் நிலையத்தில் புகார்


    திருவ்ண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த குருமபட்டி கிராமத்தை  சேர்ந்த மணிகண்டன் அனிதா தம்பதியினர் கடந்த 5 ஆண்டுகளாக நீரின்றி விவசாயம் பொய்த்துப் போனதால் வாழ வழியின்றி தவித்து வந்தனர்.  அப்போது தம்பதியினர் இருவரும் பசுமாடுகளை வாங்கி பிழைப்பு நடத்த முடிவு செய்து வட்டிக்கு பணம் வாங்கி சுமார் ஒரு லட்சத்து 85 ஆயிரம் மதிப்புத்தக்க மூன்று பசுமாடுகளை வாங்கி பால் கரந்து விற்ப்பனை செய்து பிழைப்பு நடத்தி வந்தனர்

    அப்போது மணிகண்டனின் பக்கத்து நிலத்து உரிமையாளர் மணிகண்டனின் குடும்பத்தாருடன் வழி சம்மந்தமாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இன்னிலையில் வழி கேட்டு மணிகண்டனிடம் தகராரில் ஈடுபட்டு வந்துள்ளனர்.  மறுநாள் காலையில் பசுவிடம் பால் கரந்து எடுத்துக்கொண்டு ஸ்டோர்க்கு சென்று பால் ஊற்றிவிட்டு வருவதர்க்குள் மூன்று பசுமாடுகளும் மயங்கிய நிலையில் படுத்துக்கொண்டுள்ளதை பார்த்த மணிகண்டன் மற்றும் அவரது மனைவி இறுவரும் அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அழைத்து மருத்துவம் பார்த்துள்ளார் ஆனால் அதில் இரண்டு பசுமாடுகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது

    இது சம்மந்தமாக மணிகண்டன் மேல் செங்கம் காவல் நிலையத்தில் பக்கத்து நிலத்து உரிமையாளர்கள் 6 பேர் முன்விரோத காரனமாக எனது மாடுகளுக்கு சமைத்து வைத்திருந்த உணவில் விஷம்(யூரியா) கலந்து கொலை செய்ததாக புகார் கொடுத்தார் ஆனால் புகாரை பெற்றுக் கொண்ட மேல் செங்கம் காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காமல் ஒருதலைபட்சமாக செயல் படுவதாக பாதிக்கப்பட்ட மணிகண்டன் குடும்பத்தினர் வேதனை தெரிவித்தனர்
    இது சம்மந்தமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புளுகிராஸ் ஆகியோரிடம் புகார் கொடுத்துள்ளனர் அதன் பிறகு காவ்துறையினர் 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்   

    வழி சண்டைக்காக வாயில்லாத ஜீவனை விஷம் கலந்து கொன்றதாக கேள்விப்பட்ட அப்பகுதி கிராம மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர் விஷம் கலந்த உணவை உண்ண  பசுவில் ஒன்று மட்டும் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்துவந்தது ஆனால் அதுவும்; இன்று உயிரிழந்தது


    செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad