திருவண்ணாமலையில் சுடுகாடு ஆக்கிரமிப்பு தடுப்பு வேலியை உடைத்தெறிந்து பெண்கள் ஆவேசம்
திருவண்ணாமலையில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த சுடுகாட்டை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி, தேனிமலை பகுதி மக்கள் இரண்டு நாட்களாக, போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
திருவண்ணாமலை நகரம், தேனி மலைப் பகுதியில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கடந்த 100 ஆண்டுகளாக பயன்படுத்திவந்த சுடுகாட்டை, தனிநபர் சிலர் ஆக்கிரமிப்பு செய்து உள்ளதாக குற்றச்சாட்டு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக சுடுகாடு பகுதியை ஆக்கிரமிப்பு செய்து தனிநபர் சிலர், காவல்துறை பாதுகாப்புடன் வேலி அமைப்பதை கண்டித்து, தேனி மலைப் பகுதியில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த திருவண்ணாமலை நகர போலீசார் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
போலீசாரின் வழிகாட்டுதல்படி, சுடுகாட்டு இடம் தொடர்பாக, கோட்டாட்சியரிடம் பேச்சுவார்த்தைக்கு சென்றனர். அப்போது, சுடுகாடு நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. எனவே, நீதிமன்றத்தை அனுகி பொது மக்கள் தீர்வு கானலாம் என கோட்டாட்சியர் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து அங்கிருந்து சென்ற பொது மக்கள், சுடுகாட்டு பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலையை உடைத்தெறிந்தனர்.
செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி
கருத்துகள் இல்லை