உண்ணாவிரதத்திற்கு அனுமதி மறுப்பு -கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அனைத்து ரத்ததான கழக கூட்டமைப்பினர்
அனைத்து ரத்ததான கழக கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் காளிதாஸ் தலைமையில், ரத்ததான கழக நிர்வாகிகள் தமிழரசன், மாரியப்பன், அன்புராஜ், லாசர், மகேஷ், முத்துக்குமார், ராஜேஷ் கண்ணா, கனகராஜ் மற்றும் ஐந்தாவது தூண் சங்கரலிங்கம், ஐஎன்டியூசி ராஜசேகரன், ராமகிருஷ்ணன், செல்வம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு கோவில்பட்டி ஆர்டிஓ ஆபிஸ் முன் திரண்டனர். பின்னர் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷமிட்டனர்.
தொடர்ந்து அவர்கள் ஆர்டிஓ நேர்முக உதவியாளர் சூரியகலாவிடம் வழங்கிய மனுவில், கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தேங்கி கிடக்கும் நோய் பரப்பும் மருத்துவ கழிவுகளை அகற்ற வேண்டும். மருத்துவர்களின் பணி நேரத்தை உறுதிப்படுத்தவேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ரத்ததான கழக கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்த, கோவில்பட்டி காவல் துறையில் அனுமதி கோரியிருந்தோம். உண்ணாவிரத போராட்டத்திற்கு கோவில்பட்டி மேற்கு மற்றும் கிழக்கு போலீஸ் ஸ்டேஷன்களில் அனுமதி மறுக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து டிஎஸ்பி ஆலோசனையின் பேரில், போலீஸ் டி.எஸ்.பி., ஜெபராஜிடம் போராட்டத்திற்கு அளித்தோம். இதையடுத்து நேற்று கோவில்பட்டி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஆனந்தா லாட்ஜ் எதிரே உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது. இந்நிலையில் திடீரென நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறை சார்பில் டிஎஸ்பி அளித்துள்ள சம்மனில், தற்போது உண்ணாவிரதம் நடத்தினால் கோவில்பட்டியில் சாதி சமயத்திற்கு ஊறு விளைவிக்கும் என்று தவறான காரணத்தை கூறியுள்ளனர். ரத்ததான கழகத்தினரை அவமானப்படுத்தும் வகையில் கூறியுள்ளது கண்டிக்கத்தக்கது. தனியார் மருத்துவமனைக்கு ஆதரவாக செயல்படும், மேலும் தொடர்ந்து ஒருதலை பட்சமாக நடந்து கொள்ளும், கோவில்பட்டியில் சமூக பதட்டத்தை ஏற்படுத்தும், போலீஸ் டி.எஸ்.பி., ஜெபராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நியாயமான கோரிக்கைகளுக்காக உண்ணாவிரதத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்
கருத்துகள் இல்லை