கோவில்பட்டி நேரு யுவகேந்திரா சார்பில் பிட் இந்தியா சாம்பேஜரின் பதவியேற்பு மற்றும் அண்டை இளைஞர் பாராளுமன்றம் நிகழ்ச்சி நடைபெற்றது
கோவில்பட்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேரு யுவகேந்திரா சார்பில் பிட் இந்தியா சாம்பேஜரின் பதவியேற்பு மற்றும் அண்டை இளைஞர் பாராளுமன்றம் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு கோவில்பட்டி கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆங்கில துறை தலைவர் ஜோசப் சுரேஷ் தலைமை வகித்தார்.
நேரு யுவகேந்திர உதவி இயக்குனர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். பேராசிரியர் தீபா வரவேற்றார். சிறப்பு விருந்தினராக மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் அய்யப்பன், எஸ்ஐ ஆர்தர் ஜஸ்டின், சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இயற்பியல் இயக்குனர் பொன்னுலிங்கம், வரலாற்று பேராசிரியர் கதிரேசன், ஆக்டிவ் மைண்ட் நிறுவன இயக்குனர் தேன்ராஜா, தெற்கு திட்டங்குளம் மகளிர் நற்பணி மன்ற தலைவர் ரஞ்சிதமணி, பாண்டவர்மங்கலம் கஸ்தூரிபாய்-காந்தி நற்பணி மன்ற ஆலோசகர் விஜயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமலிங்கம்
கருத்துகள் இல்லை