உதவி ஆய்வாளர் முயற்சியில் - மாணவ மாணவிகளுக்கு மாலைநேர பயிற்சி வகுப்புகள்
B3-தெப்பக்குளம் ( ச&ஒ) காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.ஆறுமுகம் அவர்களின் சொந்த முயற்சியால் ஐராவதநல்லூர் மந்தையம்மன் கோவில் அருகில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு, தியாகராஜர் கல்லூரி மாணவர்கள் மூலமாக மாலை நேர பயிற்சி வகுப்புகளை நடத்த உதவி ஆய்வாளர் ஏற்பாடு செய்தார். நேற்று (15.08.2019) மாலை நேர பயிற்சி வகுப்பில் B3-தெப்பக்குளம் ச&ஒ காவல்நிலைய ஆய்வாளர் திரு.கணேசன் அவர்கள் தலைமையில் மாணவ மாணவிகளுக்கு கவிதை மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு காவல் ஆய்வாளர் பரிசு பொருட்களை வழங்கினார். மேலும் மாலை நேர பயிற்சி வகுப்புகளை நடத்த உதவிய தியாகராஜர் கல்லூரி மாணவர்களான
1) K.ரவிகுமார்,M.Sc., கணிதம் இரண்டாம் ஆண்டு,
2) B.சிவானந்தன்,B.Sc., கணிதம் மூன்றாம் ஆண்டு,
3) P.பரத்பாண்டியன்,B.Sc., வேதியியல் இரண்டாம் ஆண்டு.
ஆகிய மூவருக்கும் அவர்களின் சேவையை பாராட்டி மதுரை மாநகர காவல்துறை சார்பாக நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன
.செய்தியாளர் : வி காளமேகம்
கருத்துகள் இல்லை