மிஸ்டர் மதுரை 2019 ஆணழகன் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.
மதுரை கே.கே.நகர் நீதியரசர் கிருஷ்ணய்யர் மஹாலில் மிஸ்டர் மதுரை 2019 ஆணழகன் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.
இந்தியன் ஃபிட்னஸ் பெடரேசன் மற்றும் நியூ வேர்ல்டு ஜிம் இணைந்து நடத்திய போட்டியில் சென்னை, கோவை, நெல்லை, நாகை, தஞ்சை, திருச்சி, திருப்பூர் என 250 பேர் கலந்து கொண்டனர்.
60 கிலோ, 65 கிலோ, 70 கிலோ எடை பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது. ேபாட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு, மற்றும் பதக்கங்கள் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் மதுரையை சேர்ந்த யோகேஷ் -ம் மிஸ்டர் மதுரை 2019 ஆணழகன் பட்டத்தை மதுரையை சேர்ந்த ஏ.சாதிக் - ம் வென்றார்.பட்டத்தையும், பரிசுகளையும் மிஸ்டர் வேர்ல்டு பட்டம் வென்ற ஆர்.தனசேகரன், ஜல்லிக்டெடு பேரவை ராஜசேகரன் மற்றும் சந்த குமார் வழங்கினர்.
செய்தியாளர் : வி காளமேகம் மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை