தொண்டி கடற்கரை யில் 500 கிலோ எடையுள்ள டால்பின் கரை ஒதுங்கியது
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி ஜெட்டி பாலம் அருகே கடற்கரையில் தடை செய்யப்பட்ட கடல் உயிரினங்களில் ஒன்றான டால்பின் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. இதனை கண்ட மீனவர்கள் கடலோர பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர் தகவலின் அடிப்படையில் வந்த அதிகாரிகள் கரை ஒதுங்கிய டால்பினை பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஆழமான குழி தோண்டி அடக்கம் செய்து விசாரித்து வருகிறார்கள். கடலில் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை தின்றதால் இறந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.
செய்தியாளர் : திருவாடானை தாலுகா - LVஆனந்த்
கருத்துகள் இல்லை