• சற்று முன்

    திருவாடானையில் மதுக்குட ஊர்வலம் நடைபெற்றது. . ஏராளமான பக்தர்கள் மதுக்குடம் ஏந்தி வீதி உலா வந்தனர்


    ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா திருவாடனையில் ஆற்றங்கரை ஓரத்தில் அமைந்திருக்கும் ஸ்ரீ மகாலிங்க மூர்த்தி கோவில் ஆடி உற்சவ விழா கடந்த புதன்கிழமை காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அய்யனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.  அந்த கோவிலில் பரிவார தெய்வமான மல்லி குடி ஆத்தாள் என்ற சுவாமிக்கு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதன் மூலமாக மது பால்குடம் தலையில் ஏந்தி வீதி உலா வந்து கோவிலை அடைந்தனர். பக்தர்கள் கொண்டு வந்த பாலினால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது இதனை கண்ட பக்தர்கள் பரவசத்தில் குலவையிட்டு கும்பிட்டு வழிபட்டனர். வருகிற வெள்ளிக்கிழமை ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்ளும் பூக்குழி திருவிழா நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது 



    செய்தியாளர் : திருவாடானை தாலுகா -  LVஆனந்த்


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad