பள்ளிக்கு அழைத்து செல்லும் ஆட்டோவிலிருந்து கீழே விழுந்த மாணவி பலி !
ஆம்பூர் நகராட்சி இந்து ஆரம்ப பள்ளியை சேர்ந்த இரண்டாம் வகுப்பு மாணவி ஆம்பூர் மல்லிகை தோப்பு பகுதியில் இருந்து தினமும் பள்ளிக்கு ஆட்டோவில் வருவது வழக்கம் இன்று காலை சுமார் 9 மணி அளவில் வழக்கம் போல் ஆட்டோ டிரைவர் கார்த்திக் என்பவர் மாணவி திவ்யதர்ஷினி அவர் தம்பி லோகேஷ் ஆகியோருடன் 15 -க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றிக்கொண்டு வரும்போது சாலையில் குடிநீர் குழாய் பதிப்பதற்காக ஆங்காங்கே ரோட்டை குழிதோண்டி உள்ளதால் மேடு பள்ளத்தில் ஆட்டோ இறங்கி வரும்போது ஆட்டோவில் முன் சீட் பகுதியில் அமர்ந்து வந்த இரண்டாம் வகுப்பு மாணவி திவ்யதர்ஷினி தவறி விழுந்து உள்ளார் இதில் பின்சக்கரம் ஏறி சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார் திவ்யதர்ஷினி தந்தையின் பெயர் முனுசாமி கூலித்தொழிலாளி தாயார் பெயர் பத்மாவதி தனியார் கம்பெனி தொழிலாளி முனுசாமி பத்மாவதிக்கு மூன்று பிள்ளைகள் மூத்த பிள்ளை திவ்யதர்ஷினி இரண்டாவது லோகேஷ் ஐந்து வயது மூன்று வயது கூலி தொழில் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
முனுசாமி பத்மாவதி மகள் திவ்யதர்ஷினி ஆட்டோவில் அதிக பாரம் அதிக குழந்தைகள் ஏற்றி வந்ததாலும் வழி முழுவதும் மேடு பள்ளங்கள் அதிகமாக இருப்பதனாலும் பலியானதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
செய்தியாளர் : வேலூர் - ராஜ ஈஸ்வரன்
கருத்துகள் இல்லை