Header Ads

  • சற்று முன்

    வேலூர் மக்களவை தேர்தலில் வேட்புமனு தமிழில் இருக்க வலியுறுத்தி காந்தியவாதி மாவட்ட ஆட்சியரிடம் மனு தாக்கல்


    வேலூர் மக்களவை தேர்தல் - தமிழில் தான் வேட்புமனு வேண்டும்- தமிழில் கிடைக்கும் வரை தேர்தல் தேதியை தள்ளி வையுங்கள் -அடம் பிடித்த காந்தியவாதியால் வேலூர் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் பரபரப்பு

    பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேலூர் மக்களவை தேர்தல் தற்போது மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த காந்தியவாதியும் அகிம்சா சோஷியலிஸ்ட் கட்சி நிறுவனமான ரமேஷ் என்பவர் இன்று வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட வேட்பு மனு வாங்குவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்தார் அப்போது வேட்புமனு ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டிருந்ததால் எனக்கு தமிழில் அச்சடிக்கப்பட்ட வேட்புமனு தான் வேண்டும் என்று அதிகாரிகளிடம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார் 

    அதற்கு அதிகாரிகள் எங்களிடம் தமிழில் மனு இல்லை என்று கூறியுள்ளனர் இதையடுத்து ரமேஷ மாவட்ட ஆட்சியரிடம் முறையிடுவதற்காக அவசர அவசரமாக மனு ஒன்றை தயாரித்தார் அந்த மனுவில் அவர், " வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிடும் எனக்கு ஆங்கிலத்தில் வேட்பு மனு வழங்கப்பட்டது ஆனால் தமிழ் மொழியில் தான் வேட்புமனு வேண்டும் என்று கேட்டேன் அதற்கு மாநில தலைமை தேர்தல் ஆணையம் வேட்பு மனுக்கள் தமிழில் இதுவரை அனுப்பவில்லை எங்களிடம் ஏற்கனவே தேர்தல் அறிவிக்கப்பட்ட போது வழங்கப்பட்ட வேட்பு மனுக்கள் தான் உள்ளது என்று அதிகாரிகள் கூறினர் இதைக்கேட்டு ஆச்சரியம் அடைந்தேன். எனவே தமிழ்நாட்டில் தமிழ் வேட்புமனு கிடைக்கும்வரை வேட்புமனு பெறவுள்ள தேதி மற்றும் தேர்தல் நடத்தும் தேதியை தள்ளி வைக்க வேண்டும்" என்று மனுவில் கூறியுள்ளார். வேலூர் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி நடைபெறுகிறது இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில் தமிழில் வேட்புமனுக்கள் கிடைக்கும் வரை தேர்தல் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்று காந்தியவாதி ஒருவர் மனு அளித்துள்ள சம்பவம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    செய்தியாளர் : வேலூர் - ராஜ ஈஸ்வரன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad