• சற்று முன்

    மதுரை மாவட்டம் கோச்சடை அருகே முடக்கு சாலை யில் மாநகராட்சி குடிநீர் குழாய் உடைந்து குளம் போல் தண்ணீர் தேங்கி உள்ளது


    மதுரை மாவட்டம்  கோச்சடை அருகே முடக்கு சாலை யில்  மாநகராட்சி குடிநீர் குழாய் உடைந்து குளம் போல் தண்ணீர் தேங்கி உள்ளது  இன்று  ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி சாலையில் தேங்கி நின்றது உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டவுடன் உடனடியாக குடிநீர் செல்லும் குழாயின் வால்வை அடைத்து எனினும் 500 மீட்டருக்கு மேல் தண்ணீர் சாலையில் வழியாக வழிந்து ஓடியது மேலும் தண்ணீர் வெளியேறுவதற்கு வழியில்லாமல் சுமார் கால் அடிக்கு மேல் குடி நீர் தேங்கி தெப்பக்குளம் போல் காணப்பட்டது 

    உடனடியாக சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்யும் பணியை துரிதமாக செயல்பட தொடங்கினார் இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி திரு பாபு. A E.அவரிடம் கேட்டபொழுது உயர் அழுத்தம் காரணமாகவே குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவித்தார் இதனால் குடிநீர் வினியோகம் எந்த வகையிலும் பாதிக்காது எனவும் தொடர்ந்து குடிநீர் விநியோகம் நடந்து கொண்டிருப்பதாகவும் தேங்கியுள்ள நீரை விரைவாக அகற்றி விடுவோம் மேலும் உடைந்த குழாயினை மாநகராட்சி ஊழியர்கள் சரி செய்து வருகிறார்கள் என தெரிவித்தார் இன்று மாலைக்குள் நீர் முழுவதும் அகற்றப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி விடும் என அவர் நம்மிடம் தகவல் தெரிவித்தார்

     செய்தியாளர்  வி காளமேகம்  மதுரை மாவட்டம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad