• சற்று முன்

    சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும் கோழிப்பண்ணையை அகற்ற கோரி கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை


    தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வேலிடுபட்டி கிராமத்தில் உள்ள அருந்ததியர் காலனியில் 300க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இநாத காலனியில் எவ்வித அடிப்படை வசதியும் இல்லை என்றும், குறிப்பாக கழிப்பிட வசதி இல்லாத காரணத்தினால் குழந்தைகளும், மாணவர்களும், முதியோர் மற்றும் பெண்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருவதாகவும், எனவே உடனடியாக கழிப்பறை கட்டி தர வேண்டும், மேலும் மக்களின் குடியிருப்பு பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கோழிப்பண்ணையினால் சுகாதார சீர் கேடு மற்றும் துர்நாற்றம் காரணமாக மக்கள் பாதிக்கப்பட்டு வருவதாகவும், எனவே அந்த கோழிப்பண்ணையை அகற்ற வேண்டும்,   அப்பகுதியில்  சட்டவிரோதமாக இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ள தனி நபரின் பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட தலைவர் நம்பிராஜ் பாண்டியன் தலைமையில் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் சூரியகலாவிடம் மனு அளித்தனர். இதில் ஏஐடியுசி மாவட்ட துணைத் தலைவர் தமிழரசன், மாமன்னர் புலித்தேவர் மக்கள் நல இயக்க நிறுவனத் தலைவர் செல்வம் என்ற செல்லத்துரை, ஐ.என்.டி.யூ.சி. மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகரன், அண்ணா தொழிற்சங்கம் ராமகிருஷ்ணன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பிரபாகரன், வழக்கறிஞர் சாக்கிய ராசு,அனைத்து மருத்துவ மக்கள் முன்னேற்ற கழகம் மாவட்ட தலைவர் கருப்பசாமி, பகத்சிங் ரத்த தான  கழக தலைவர் காளிதாஸ், வேலிடுபட்டி அருந்ததியர் சமுதாய நாட்டாமை மாரியப்பன், ஆதித்தமிழர் பேரவை விளாத்திகுளம் ஒன்றிய செயலாளர் குளத்தூர் கண்ணன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட அமைப்புச் செயலாளர் சின்னதாய் ராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமன்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad