தென்காசி, செங்கல்பட்டு தனி மாவட்டங்களாக சட்டமன்ற பேரவையில் இன்று முதல்வர் அறிவிப்பு
தமிழகத்தில் புதிதாக செங்கல்பட்டு, தென்காசி ஆகிய மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.நெல்லையில் இருந்து பிரிந்து தென்காசி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என்றும் காஞ்சிபுரத்தில் இருந்து பிரிந்து செங்கல்பட்டு தனி மாவட்டமாக உருவாக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி 110 விதியின் கீழ் அறிவித்துள்ளார். மேலும், புதிய மாவட்டங்களுக்கு 2 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். ஏற்கனவே கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக உருவாக்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், தற்போது மேலும் 2 மாவட்டங்கள் உதயமாகியுள்ளன.இதை தொடர்ந்து தமிழகமாவட்டங்களின் எண்ணிக்கை 35 ஆக உயர்ந்துள்ளது.
கருத்துகள் இல்லை