கோவில்பட்டியில் மழைநீர் சேகரிப்பு வலியுறுத்தி பள்ளி மாணவர்கள் விழிப்புணர்வு ஸ்கேட்டிங் பேரணி
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் பள்ளி சார்பில் மழைநீர் சேகரிப்பு, சுற்றுப்புற தூய்மை ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி மற்றும் ஸ்கேட்டிங் பேரணி நடைபெற்றது. பேரணியை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் திரளான மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பாதகைகளுடன் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல் நிலைப்பள்ளி சார்பில் மழைநீர் சேகரிப்பு, சுற்றுப்புற தூய்மை ஆகியவற்றை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி மற்றும் ஸ்கேட்டிங் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் விழிப்புணர்வு பேரணியை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாணவர்களின் ஸ்கேட்டிங் பேரணி முன் செல்ல மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பேரணி தொடர்ச்சியாக நடைபெற்றது. இந்த பேரணி புதுரோடு, ரெயில்வே நிலையம், மில் தெரு, கிழக்கு காவல் நிலையம், எட்டயபுரம் ரோடு வழியாக சென்று பள்ளியில் நிறைவு பெற்றது. இதில் திரளான மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பாதகைகளுடன், விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி கலந்து கொண்டனர்
கருத்துகள் இல்லை