Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டியில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம்


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் வட்டார வள மையம் சார்பில் வ உ சி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி மற்றும் வட்டார வள மையம் சார்பில் மாற்றுத் திறனுடைய குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாமிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. கோவில்பட்டி வ உ சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமை கோவில்பட்டி கல்வி மாவட்ட அலுவலர் மாரியப்பன் தொடங்கி வைத்தார்.

    முகாமில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இராஜசெல்வி  இதில் மனநல மருத்துவர், காது. மூக்கு ,தொண்டை மருத்துவர் எலும்பு, மூட்டு மருத்துவர், கண் மருத்துவர்கள் கொண்ட சிறப்பு மருத்துவ குழுவினர் கலந்துகொண்டு மாற்றுத்திறனுடைய குழந்தைகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கினர். மேலும் முகாமில் கலந்துகொண்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தேசிய ஊனமுற்றோர் அடையாள அட்டை, பேருந்து. ரயில் பயண சலுகை அட்டை , இலவச அறுவை சிகிச்சை வழங்குவதற்கு மருத்துவர்களால் பரிந்துரை செய்யப்பட்டது. இது தவிர கல்வி உதவித்தொகை மற்றும் பராமரிப்பு உதவி தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களும் வழங்கப்பட்டன. முகாம் ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் ஆனந்த லட்சுமி வட்டார ஒருங்கிணைப்பாளர் அமுதா ஆகியோர் செய்திருந்தனர்

     கோவில்பட்டி - சிவராமலிங்கம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad