முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் சிறை தண்டனை அனுபவித்து வந்த நளினி இன்று பரோலில் வெளியே வந்தார்
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் நளினி மற்றும் அவரது கணவர் முருகன் உட்பட 7 பேர் கடந்த 28 ஆண்டுகளாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர் இதில் நளினி வேலூர் பெண்கள் சிறையிலும் முருகன் வேலூர் ஆண்கள் சிறையிலும் தனித்தனியே தண்டனை அனுபவித்து வருகின்றனர் இந்த நிலையில் நளினி தனது மகள் திருமணத்திற்காக ஆறுமாதம் பரோல் கோரி கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது அதன்படி கடந்த ஜூலை 5ம் தேதி நளினி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வேலூர் பெண்கள் சிறையில் இருந்து சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டார் அப்போது நீதிபதிகள் ஒரு மாதம் பரோல் வழங்கி உத்தரவிட்டனர்
இதையடுத்து வேலூர் சிறை துறை சார்பில் வழங்கப்பட்டது அதன்படி வெளியே செல்லும் நளினிக்கு ஜாமீனில் வழங்கும்படி சிறை தரப்பில் கேட்கப்பட்டது நளினியின் தாயார் பத்மாவதி மற்றும் உறவினர் சத்தியா ஆகிய 2 பேர் ஜாமீன் மற்றும் ஆவணங்கள் வழங்கினர் பின்னர் நளினியை வேலூரில் தங்க வைக்கலாமா அல்லது சென்னை இல்லத்தில் தங்க வைக்கலமா என்பது குறித்து காவல்துறை அறிக்கை தரும்படி சிறை நிர்வாகம் கடிதம் எழுதியது அதன்பேரில் மாவட்ட காவல்துறை வேலூர் வள்ளலார் அடுத்த ரங்காபுரம் பகுதியில் உள்ள திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணை பொதுச் செயலாளர் சங்கராயர் வீட்டில் தங்க வைக்கலாம் என அறிக்கை தாக்கல் செய்வது எனவே எந்த நேரமும் நளினி வெளியே வரலாம் என எதிர்பார்க்கப்பட்டது இந்த நிலையில் இன்று ஒரு மாதம் பரோலில் நளினி வெளியே வருவதாக காவல்துறை தரப்பில் அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியானது
அதன்படி இன்று காலை சரியாக 10 மணியளவில் வேலூர் தொரப்பாடி பெண்கள் சிறையில் இருந்து வெளியே அழைத்து வரப்பட்டு பின்னர் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவல்துறை வேன் மூலம் வேலூர் ரங்காபுரம் சங்கராயர் இல்லத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். நளினி சிறையில் இருந்து வெளியே வரும்போது ஆரஞ்சு நிற சேலை அணிந்து தலையில் மல்லிகை பூ வைத்து இருந்தார். நளினி தனது சகோதரி கல்யாணி மற்றும் சகோதரன் பாக்கியநாதன் ஆகியோருடன் தங்குகிறார் இதையடுத்து நளினி தங்கியிருக்கும் வீட்டை சுற்றிலும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை