அத்திவரதர் சிறப்பு அஞ்சல் உறை விற்பனை திருச்சியில் துவக்கம்
அத்தி வரதர் எனப்படும் அத்தி மரத்தால் செய்யப்பட்ட பெருமாள், அனந்தசரஸ் திருக்குளத்தில் பள்ளி கொண்டிருக்கிறார்.முழுதும் அத்திமரத்தால் ஆன பள்ளிகொண்ட பெருமாள் 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை, குளத்து நீரை முழுவதும் வெளியேற்றி ஸ்ரீ அத்தி வரதரின் திருவுருவச் சிலையை வெளியே எழுந்தருளச் செய்து, கோயிலின் வசந்த மண்டபத்தில் 48 நாட்கள் பொது மக்களுக்கு சேவை சாதிப்பார். இதில் முதல் 24 நாட்கள் சயன திருக்கோலம், அடுத்த 24 நாட்கள் நின்ற திருக்கோலம் என சேவை சாதித்து ஒரு மண்டல காலத்துக்கு பிறகு மறுபடியும் அனந்தசரஸ் திருக்குளத்தில் எழுந்தருளச் செய்வார்கள்.
1979ம் ஆண்டிற்கு பின், கடந்த ஜூலை 1ம் தேதி, அனந்த புஷ்கரணியில் இருந்து, அத்தி வரதர் வெளியே வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.அத்தி வரதர் வைபவத்தை முன்னிட்டு, சிறப்பு அஞ்சல் உறை வெளியிட, ஹிந்து அறநிலையத் துறை சார்பில் வேண்டுகோள் விடப்பட்டது.அதன்படி, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிறப்பு அஞ்சல் உறையை,கவர்னர் பன்வாரிலால் புரோஹித், சென்னை கவர்னர் மாளிகையில் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில், கவர்னரின் கூடுதல் முதன்மை செயலர் ராஜகோபால், முதன்மை அஞ்சல் துறை தலைவர்கள் சம்பத், சாருகேசி, சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் ஆனந்த், ஹிந்து அறநிலையத் துறை கமிஷனர் பனீந்திர ரெட்டி, செயல் அலுவலர் தியாகராஜன் உட்பட பலர்பங்கேற்றனர்.
ஒரு லட்சம் அஞ்சல் சிறப்பு உறைகள் தயாரித்து, 20 ரூபாய்க்கு இந்திய அஞ்சல் துறை வழங்குகின்றது திருச்சி தலைமை தபால் நிலைய அஞ்சல் தலை சேகரிப்பு பிரிவில் அத்திவரதர் சிறப்பு அஞ்சல் உறை விற்பனை துவங்கியது.அஞ்சல் தலை சேகரிப்பு நிலைய அலுவலர் ராஜேசிடம் சிறப்பு உறையினை அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் ரகுபதி , யோகா ஆசிரியர் விஜயகுமார், சதீஷ், கார்த்தி, தாமோதரன் உள்ளிட்டோர் ஆர்வமுடன் வாங்கினார்கள்.
கருத்துகள் இல்லை