Header Ads

 • சற்று முன்

  தியானம் பயில்வோம்


  ஒவ்வொருவரும் அவரவர் வாழ்க்கையில் அனுபவித்த இன்பம், துன்பம், பயம், கவலை, நம்பிக்கையின் ஒட்டுமொத்த உருவமாக வாழ்ந்து வருகிறார்கள்.பல விஷய அறிவை சேர்த்து வைத்து, மூளையில் பதிவாக வைத்து, அதையே எண்ணங்களாக, சொல்லாக, செயலாக உருவெடுக்கின்றன. எண்ணம் ,சொல், செயல், விளைவு, அனுபவம் என தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்.தான் கற்ற அறிவில் இருந்து ஒவ்வொருவரும் விடுதலை பெறுவதே இல்லை.அப்படிப்பட்ட சூழலில், தன் உண்மையான தன்மையை உள் ஆய்வாக, தன்னை அறிவதற்கு, மேற்கொள்ளும் பயிற்சி தியானம் ஆகும் தியானப் பயிற்சியால், நம்மையும், சமூகத்தையும் சரியான கண்ணோட்டத்துடன் புரிந்து சரியான புரிதலுடன் நடக்க இயலும் .பிறந்தது முதல் இறுதி நாட்கள் வரை மனிதன் வெளிஉலகத்துடன், விண்ணிலும், மண்ணிலும், ஆழ்கடலிலும் ஆய்வு செய்து வருகின்றனர்.வெளியுலகத் தொடர்புகளால் கிடைக்கும் அனுபவத்தையும், ஆனந்தத்தையும், உடலாலும், மனதாலும் அனுபவிக்கிறோம்.

  ஆனந்தத்தைக் கொடுக்க கூடியதையும், உணர்வையும், நாம் நம்மையே கவனிப்பதால் நம்மை அறிந்து கொள்வதுடன் நமது உணர்வுகளோடு நேர்மறையாகவும் நடந்து கொள்ள இயலும்.அவ்வகையில் தியானம் ஒவ்வொருவருக்கும் மிகப்பெரிய அளவில் ஊக்க சக்தியாக உள்ளது .தியானம் செய்பவர்கள் ஒழுக்க நெறியை கடைபிடித்தல் வேண்டும். தியானம் மேற்கொள்பவர்கள் கடமைகளில் இருந்து விடுபட்டு அமைதியான நிலையில் தியானம் பயிற்சி செய்ய வேண்டும்.ஏனென்றால் ஒவ்வொரு மனிதனும் தனது சுக ,துக்கங்களை பிறருடன் பகிர்ந்து கொண்டே இருக்கிறார்கள்.மகிழ்ச்சியற்ற சூழலில் உள்ள ஒருவரது இறுக்க தன்மை அவர் பகிர்ந்து கொள்ளும் பொழுது இன்னொருவர் மன இயக்கத்திலும் இறுக்க தன்மையை ஏற்படுத்துகிறது. இவை சமூகத்தையும் பாதிக்கிறது. எவ்வளவோ உழைத்து வருமானத்தை பெருக்கி வளமான வாழ்க்கையை அமைத்துக் கொண்டாலும் மனவளம் என்பது பலருக்கு கிடைப்பது இல்லை .

  தியானம் மனதின் செயல்முறைகளை பண்படுத்தி பக்க நெறிமுறையோடு  வழிவகை செய்கின்றது. தியானப் பயிற்சியில் புரிதல் ஏற்படும் வரை அயர்ச்சியும், சலிப்பும் ஏற்படும்.தியானம் செய்யும் பொழுது மட்டுமே தன்னைத்தானே தணிக்கை செய்யாமல் காண இயலும். தன்னைத்தானே கவனிக்கும் பொழுது நம்முள்ளே ஏற்படும் எதிர்வினைகள், தப்பெண்ணங்கள், மன இறுக்கங்களை கண்டு உணரலாம்.கண்டுணர்வது மட்டுமல்ல மன இறுக்கங்களை கலையலாம். ஏனெனில் பெரும்பான்மையான பிரச்சினைகள் எண்ணங்களாலேயே எழுகின்றன .உடலுடன் மனம் இணைந்து செயல்படுவது நம் வாழ்வு மனதானது, அறிவு, உணர்வு, செயல், விழிப்பு நிலை போன்ற நிலைகளில் செயல்படுகிறது. இவை கணத்திற்கு கணம் மாறிக்கொண்டே இடைவிடாமல் வருகிறது. தியானம் மூலம் அனைத்து எண்ணங்களும் நிலையற்றவை என உணர்ந்து வாழ இயலும். தியானம் எவ்வித நிபந்தனையும் இன்றி, இயல்பாக சரீரத்தில் நடைபெறும் உள்வெளி சுவாச இயக்கத்தை அந்நேரத்தில் எனும் சிந்தனைகளில் தொடர்பு கொள்ளாமல் கவனிக்க வேண்டும்.பல எண்ணங்கள் நிகழ்வுகள் நினைவலைகளாக வந்தாலும் அவற்றுடன் தொடர்பு கொள்ளாமல் விலகி பார்வையாளர்களாக இருந்து கவனிக்க வேண்டும். பார்வையாளராக இருக்கும்பொழுது நமது சரீரத்தில் இயல்பாக நடைபெறும் சுவாச இயக்கம் உடலில் ஏற்படும் உணர்வுகள் மாற்றங்கள் ஆகியவற்றை மிக நுணுக்கமாகக் கவனிக்க வேண்டும்.நாம் நம்மை கவனிக்கும் போது ஏற்படும் உள்ளக் கிளர்ச்சி வெளிப்பாட்டை நம்மால் உணர இயலும் இன்பம் ஆனாலும் துன்பமானாலும் மன அழுத்தம் ஆனாலும் நமது உள் மனதின் அமைப்பை கவனித்தால் பூரண நிலையை பெறுவோம்

  மேலும் உணர்வுகளால் ஏற்படும் நிகழ்வுகளும் கோபம் ஆசை எதிர்பார்ப்பு காமம் வெறுப்பு இன்பம் துன்பம் அகங்காரம் அனுபவங்களைக் கடந்து ஆத்மார்த்தமான ஆரோக்கியமான ஆனந்தமான சுதந்திர வாழ்க்கையை மேற்கொள்ள முடியும்

  மேலும் விவரங்களுக்கு
  யோகா ஆசிரியர் விஜயகுமார்
  அமிர்தா யோக மந்திரம் புத்தூர் ,திருச்சி-17
  செல் 98424 12247

  கருத்துகள் இல்லை