• சற்று முன்

    திருவண்ணாமலை அரசு மருத்துவமனை அருகே சுகாதார சீர்கேடு நடவடிக்கை எடுப்பாரா மாவட்ட ஆட்சியர்


    திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைக்கு தினசரி நோயாளிகள் மற்றும் புறநோயாளிகளை பார்க்க வருபவர்கள் என்று ஒரு நாளைக்கு சராசரி 500 மேற்பட்டோர் வந்து வந்து செல்கின்றனர். வியாதி குணமாக அரசு மருத்துவமனைக்கு வந்தால் புது வியாதியை தொற்றி கொண்டு செல்லும் அவலநிலை  உருவாகியுள்ளது. அரசு மருத்துவமனை அருகே பயணிகள் நிற்பதற்குபேருந்து  நிழற்குடை அமைந்துள்ளது. இந்த பேருந்து நிழற்குடையை சுற்றி தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கவர்கள் குப்பைகள் என குவிந்து கிடக்கின்றன. இதனால் இங்கு துறுநாற்றம் விசிவதால் நோயாளிகள், மற்றும் பொது மக்கள் சில மணித்துளிகள் கூட நிற்க முடியாமல் தவிக்கின்றனர். இதனால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்படும் அதிரடியாக குப்பை கழிவுகளை மாநகராட்சி அப்புற படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் கோரிக்கை வைக்கினறனர் .. 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad