Header Ads

  • சற்று முன்

    திருவாடானையில் தென்கிழக்கு தெரு மாரியம்மன் கோவில் திருவிழா அதிவிமர்சியாக நடைபெற்றது.


    ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை தென்கிழக்கு தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ முத்து மாரியம்மன் கோவில் திருவிழா கடந்த செவ்வாய் கிழமை ஜூலை 16ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அது முதல் ஒவ்வோர் நாளும் அம்மனுக்கு தென்கிழக்கு தெருவைச் சேர்ந்தவர்கள் மண்டக்ப்படி வைத்து சிறப்பு பூஜைகள், அபிஷேகம் செய்து வழிபட்டனர். 

    கடைசி நாளான  இன்று செவ்வாய் கிழமை பக்தர்கள் கடலில் நீராடி வந்து திருவாடானை அருள்மிகு ஆதிரெத்தினேஸ்வர்ர் ஆலயம் முன்பு உள்ள ஆறாம் மண்டக்கப்படி மண்டபத்தில் கைகளில் காப்புகட்டி பால்குடம் எடுத்தும், அலகு குத்தி பால்குடம் எடுத்தும் வீதி உலா வந்து கோவில் முன்பு அமைத்திருந்த நெருப்பில் இறங்கி நேற்றிக்கடன் செலுத்தினார்கள். இரவு வாண வேடிக்கையுடன் அம்மன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதனை தொடர்ந்து இரவு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்  

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad