திருவண்ணாமலை மாவட்டத்தில் குடிநீர் கிணற்றை சீரமைக்க கோரி பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்
திருவண்ணாமலை நகராட்சி பகுதிகளில் அமைந்துள்ள கிணறுகள் சீரமைக்கப்படாமல் கிடப்பதால், பொது மக்கள் குடிநீருக்கு தவிக்கும் நிலை உருவாகியுள்ளது.
திருவண்ணாமலை நகரம், அண்ணாநகர், 7 ஆவது தெரு, 28 ஆவது வார்டில் சுமார் 40 ஆண்டுகளாக குடிநீர் கிணறு ஒன்று மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. தற்போது முறையான பராமரிப்பில்லாததால், படிப்படியாக அந்த கிணறு சீரரிந்து வருகிறது. இதேபோல், திருவண்ணாமலை நகரத்தில், அண்ணாநகர், திருநாவுக்கரசர் தெரு, தென்சன்னதி தெரு, திருவூடல் தெரு, கல்யாண கிணற்று தெரு உள்ளிட்ட பகுதிகளில் அமைந்தள்ள கிணறுகள், மற்றும் தாமரைக்குளம், ஈசானிய குளம், துர்கையம்மன் கோயில் குளம் உள்ளிட்ட நீர்நிலைகள் பராமரிக்கப்படாமல் உள்ளதால், அவைகள் சேதமடைந்து வருகிறது. இதை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனாலும், இன்றுவரை அந்த கோரிக்கைகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொது மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே, மக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு உடனடியாக இந்த கிணற்றை சீரமைக்க வேண்டும் என வலிறுத்துகின்றனர்.
செய்தியாளர் : திருவண்ணாமலை மாவட்டம் - மூர்த்தி
கருத்துகள் இல்லை