திருவாடானை சினேகவல்லி சமேத ஆதிரத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூரத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
திருவாடானை சினேகவல்லி சமேத ஆதிரத்தினேஸ்வரர் கோயில் ஆடிப்பூர திருவிழா இன்று துவங்கி நடைபெற்று வருகிறது வருகிற 5ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது
திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட சினேகவல்லி சமேத ஆதிரத்தினேஸ்வரர் கோயில் உள்ளது பாண்டிய ஸ்தலம் 14 ல்இது எட்டாவது ஸ்தலமாகும் இக்கோயிலின் ஆடிபூர திருவிழா இன்று 25 ஆம் தேதி துவங்கி வருகிற 8 8 2019 வரை நடைபெற உள்ளது விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் அன்ன வாகனம் சிம்ம வாகனம் ரிஷப வாகனம் ஆகிய வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெறும் இரவு கலை நிகழ்ச்சிகளும் வான வேடிக்கைகளும் நடைபெறும் வருகிற 2ஆம் தேதி சிறப்பு நிகழ்வுகளாக தேரோட்டமும் 5ஆம் தேதி திருக்கல்யாணமும் நடைபெற உள்ளது
கருத்துகள் இல்லை