திருவண்ணாமலையில் ஆடி கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் வசதிக்காக 1008 காவடிகள் தயார் நிலையில் உள்ளது
திருவதிருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு பக்தர்கள் காவடி எடுப்பதற்காக 1008 காவடிகள் தயார் நிலையில் உள்ளது. வரும் வெள்ளிக்கிழமை அன்று முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனை ஒட்டி பக்தர்கள் தங்களுடைய வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக வேல் குத்தியும், காவடி எடுத்தும், தேர் இழுத்தும் தங்களுடைய நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவார்கள்..
பக்தர்கள் தங்களின் நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவதற்காக திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் வளாகத்தில் உள்ள கல்யாண சுந்தரர் திருமண மண்டபத்தில் 1008 காவடிகள் தயார் நிலையில் உள்ளது.இந்த காவடிகள் அனைத்தும் வெள்ளிக்கிழமை காலை 8 மணி அளவில் பக்தர்கள் காவடி எடுப்பதற்காக தயார் நிலையில் உள்ளது.அத்துடன் பால் குடம் எடுத்து செல்வதற்கு மண் பாத்திரத்தில் தயாரிக்கப்பட்ட பால் குடங்களும் கோயில் பணியாளர்கள் தயார்படுத்தி வருகின்றனர். குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடமாக கருதி பக்தர்கள் காவடி எடுத்துச் சென்று முருகனை வழிபடுவது வழக்கமாகும்.
கருத்துகள் இல்லை