தேர்தல் பறக்கும் படை சோதனையில் திமுக பிரமுகர் வீட்டில் கட்டை பை நிறைய பணம் பறிமுதல்
வேலூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட புதுவசூர் பகுதியில் ரியல் எஸ்டேட் அதிபர் ஏழுமலை என்பவரது வீட்டின் பின்புறத்தில் வீசப்பட்ட பையில் இருந்து 27 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் பறிமுதல். ஏழுமலையிடம் தொடர் விசாரணை. (தி.மு.க பிரமுகர்)
வேலூர் மாவட்டம் அலமேலுமங்காபுரம் அடுத்த புதுவசூர் பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஏழுமலை என்பவருக்கு சொந்தமான வீட்டில் வேலூர் வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேரும், தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகளும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் மொத்தம் 27 லட்சத்தி 76 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு ஏழுமலையிடம் தொடர்ந்து விசாரணை மேற்க்கொள்ளப்பட்டு வருகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் வீட்டிரற்குள் நுழையும் போது வீட்டில் இருந்த நபர் கட்டைபையை வீட்டிரற்க்கு வெளியே தூக்கி வீசியதாகவும் அதை அதிகாரிகள் சோதனை செய்த போது அதில் 27 லட்சத்தி 76 ஆயிரம் ரூபாய் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்தனர். . இது தொடர்பாக அதிகாரிகள் சோதனையில் ஏழுமலை கூறும் போது. இது தன்னுடைய பணம் தான் என்றும் இது வீடு வீற்றல் வாங்கள் தொழிலில் வந்தது ஏன்றும் இதனை வீட்டில் வைக்ககோரி எங்களது வீட்டில் இருந்தவர்களிடம் கொடுத்து வைத்திருந்தேன். 10 நபர்கள் வருவதை பார்த்த எங்கள் வீட்டு ஆட்கள் பயந்து போய் பணப்பையை தூக்கி வீசியுள்ளனர் என வாக்கு மூலம் அளித்து வருகிறார். ஏழுமலையின் வாக்கு மூலத்தை ஏற்க்காத அதிகாரிகள் பணம் வந்த வழி, வங்கி கணக்குகள், மற்றும் ஆவணங்களை காண்பிக்கும் படி தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏழுமலை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி தற்போது திமுகவில் உள்ளார். இவரது அண்ணண் நடராஜன் ம.தி.மு.கவில் இருந்து விலகி தி.மு.கவில் இணைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதுஎமது செய்தியாளர் : வேலூர் - ராஜ ஈஸ்வரன்
கருத்துகள் இல்லை