Header Ads

  • சற்று முன்

    திருவாடானையில் போலி டாக்டர்கள் கைது


    திருவாடானையில் போலி டாக்டர்கள் கைது. போலி டாக்டர்கள் அதிகரிப்பதற்கு அரசு மருத்துவ மனையில் சிகிச்சை சரியின்மையே காரணம், பொது மக்கள் குற்றச்சாட்டு

    திருவாடானையில் அரபு பதிவு பெறாத சித்த வைத்திய டாக்டர்கள் சட்டத்திற்கு புறம்பாக ஊசி போடுவதாக தகவல் கிடைத்த்தின் பேரில் திருவாடானை காவல் துணைக்கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கையால் திருவாடானை, சின்ன கீரமங்களத்தில் மருத்துவம் பார்த்த போலி மருத்துவர்கள் கைது செய்யப்பட்டனர். திருவாடானை வடக்கு ரத வீதியில் மருத்துவம் பார்த்த ஷகிலாபானு(60) மங்களக்குடியைச் சேர்ந்த சிராஜூதீன்(46) திருவாடானை பிடாரி கோவில் தெருவிலும், சின்னகீரமங்கலத்தில் அரசூரைச் சேர்ந்த சாமிநாதன்(52) ஆகியோர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் ஊசி போட்டு சிகிச்சை அளித்து வந்துள்ளனர். அவர்களை திருவாடானை காவல்நிலையத்தார் கைது செய்து அவர்களிடமிருந்து நிறைய ஊசி மருந்துகளை கைப்பற்றி விசாரித்துவந்தனர். இவர்கள் மீது ஏற்கனவே இவ்வாறு மருத்துவம பார்த்து சம்மந்தமான வழக்கு பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து திருவாடானை மக்கள் கூறுகையில் தலைமை அரசு மருத்துவ மனையிருந்தும் அங்கு மருத்துவர்கள் சரிவர வருவதில்லை அப்படி வந்தாலும் நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்து ஊசி போடுவதில்லை. மேலும் மருத்துர்கள் மருத்துவ மனையில் இருப்பதை விட தனியார் கிளினிக்கிலும், திருவாடானை டீக்கடையில் உட்கார்ந்து கதை பேசுவதும்தான் காரணம் என்கிறார்கள். தற்பொழுது திருவாடானை அரசு மருத்துவ மனையில் உள்நோயளிகளை அனுமதிப்பமதில்லை அழுதுது கொத்தால் சிவகங்கை மற்றும் ராமநாதபுரத்திற்கு மருத்துவ மனைக்கு மேல் சிகிச்கைக்கு என்று அனுப்பிவிடுகிறார்கள். மேலும் திருவாடானயில் மருத்துவ மனையில் உள்நோயாளியாக இருக்கும் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை பண்னுவதில்லை. இந்த மருத்துவ மனையில் 5 மருத்துவர்கள் பணியில் இருந்தும் மருத்துவர்கள் அதிக நேரம் இருப்பதில்லை நர்சுகளே வைத்தியம் பார்க்கின்றனர். அதனால் பொது மக்கள் இவ்வாறு போலியாகவும் குறைந்த செலவில் மருத்துவம் பார்க்கும் போலி மருத்துவர்களை நாடும் அவல நிலை உள்ளது. அதே நேரம் திருவாடானை அரசு மருத்துவ மனையில் மருத்துவம் பார்த்தது போன்ற ஆவணங்கள் தயார் செய்து வைத்துகொள்வதால் உயர் அதிகாரிகள் கண்டுபிடிக்க முடிவதில்லை. மேலும் பிரச்சணைகளில் பாதிக்கப்பட்டு ரத்த காயங்களுடன் வரும் நோயளிகளை உள்நோயாளியாக வைத்து சிகிச்சை அளிக்காமல் வெளிநோயாளியாகவே வைத்து சிக்ச்சை அளிப்பதால் பாதிக்கப்ட்டவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். அதே நேரம் மருத்துவர்களுக்கு வேண்டியவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சொன்னால் அவர்களுக்கு மட்டும் உள்நோயாளியாக சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதற்கு மாவட்ட நிர்வாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்கள்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad