Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே ஆவல்நத்தத்தில் ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணிகளை தொடங்க கோரி கிராம மக்கள் யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.


    கோவில்பட்டி அருகே ஆவல்நத்தம் கிராமத்தில் அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் கண்டிப்பாக 100 நாட்கள் வேலை வழங்க வேண்டும். வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்க வேண்டும். நடப்பாண்டுக்கான ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என வலியுறுத்தி கிராம மக்கள் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். போராட்டத்துக்கு, பகத்சிங் மன்ற மாவட்ட தலைவர் உத்தண்டு ராமன் தலைமை வகித்தார். ஆட்டோ தொழிற்சங்க செயலாளர் கொம்பையா மற்றும் ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணியாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை கோஷங்கள் முழங்கினர். பின்னர்  வட்டார வளர்ச்சி அலுவலர் மாணிக்கவாசகத்திடம் மனு வழங்கினர். மனுவை பெற்றுக்கொண்ட அவர், அடுத்த வாரத்தில் இருந்து ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்தார். அதன் பின்னர் கிராம மக்கள் கலைந்து சென்றனர்.

    செய்தியாளர் : கோவில்பட்டி - சிவராமன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad