Header Ads

  • சற்று முன்

    வருகின்ற வெள்ளிக்கிழமைக்குள் உருது படிக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் செங்கோட்டையன் வேலூரில் பேட்டி


    வேலூர் மக்களவைத் தேர்தல் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 05 தேதி நடைபெற உள்ள நிலையில் அதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.  இந்த நிலையில் இன்று வேலூர் பழைய மருத்துவமனை சாலையில் அதிமுக சார்பில் போட்டியிடும் புதிய நீதிக் கட்சியின் நிறுவனர் ஏ சி சண்முகத்தை ஆதரித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கால்நடை மருத்துவ துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்  தேமுதிக மத்திய மாவட்ட கழக செயலாளர் ஸ்ரீதர் ஆகியோர் பிரச்சாரத்தை துவக்கி வைத்ததோடு அரசின் நலத்திட்டங்களை கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், கேபிள் கட்டணம் உயர்ந்திருப்பதாக மக்கள் முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர் அதன் அடிப்படையில் விரைவில் கேபிள் கட்டண குறைப்பு முதல்வர் அறிவிப்பார் எனவும், வேலூரில் உருது பேசும் மாணவர்கள் அதிகளவில் இருக்கின்றனர். 

    அதே போல் அவருடைய பெயர்கள் மாற்றப்பட்டுள்ளனது மாணவர்களின் கோரிக்கையை ஏற்று வருகின்ர வெள்ளிக்கிழமை மாலைக்குள் உருது பாடபுத்தகங்கள் மாணவர்களின் கையில் தவிழும் என்று கூறினார். இஸ்லாமிய மக்களுக்கு சிறுபான்மை பெரும் மக்களுக்கும் முழு ஆதரவை கொடுக்கும் அரசாக அதிமுக அரசாக விளங்குகின்றது. அவை இவர்களுக்கு எந்த இடர்பாடு வந்தாலும் முழு ஆதரவு கொடுக்கும் அரசாக இருக்கும்.

    ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி வருவதை குறித்து கேட்ட கேள்விக்கு தமிழக முதல்வர் பாரதப்பிரதமர்  மோடியிடம் மற்ற குழுவிடம் பேசி இரண்டு மூன்று நாட்களில் சுற்றுபயணம் செய்து பார்வையிடுவார். ஆந்திரா, கர்நாடக போன்ற மற்ற மாநிலங்களுடன் நதிநீர் பிரச்சனை மத்திய அரசு பேசி நல்ல முடிவு செய்து வருகிறது. அதே போல் மற்ற மாநிலங்களில் உற்பத்தியாகும் நதிநீர் பங்கீட வழக்கு தொடர்ந்து அதில் வெற்றிபெற்று தமிழ்நாட்டின் உரிமையை என்றைக்கும் பாதுகாத்து நடவடிக்கை எடுப்பார் நமது முதலவர் என்று கூறினார்... மேலும் வேலூர் கிறித்தவ மத போதகர் பிசப் அவர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் வாக்கு சேகரித்தார்..

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad