திருவாடானை அரசு கல்லூரியில் மர கன்று நடும் விழா நடைபெற்றது
திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நேசம் அறக்கட்டளை இணைந்து நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் விழிப்புணர்வு விழா கொண்டாடப்பட்டது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நேசம் அறக்கட்டளையின் சார்பாகவும் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாகவும் மரக்கன்று நடப்பட்டது. இதில் திருவாடானை உரிமையியல் நீதிபதி பாலமுருகன் தலைமை ஏற்று தொடங்கி வைத்தார்.
இதில் கல்லூரி முதல்வர் சுப்பிரமணியன், முனைவர் பழனியப்பன் , வட்டார வளர்ச்சி அலுவலர் ஸ்டெல்லா லூர்துமேரி, வழக்கறிஞர்கள் சங்க தலைவர் நாகராஜ், ரோட்டரி சங்க தலைவர் வழக்கறிஞர் கண்ணன், அரசு வழக்கறிஞர் காளீஸ்வரி,கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். பின் மாணவ மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு வழங்கிய மரக்கன்றுகளை சிறப்பாக வழக்க்கும் மாணவர்களக்கு பின்நாளில் ஊக்க பரிசு வழங்கப்படும் என்று நேசம் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நீதிபதி பாலமுருகன் மரக்கன்றுகளை நட்டார். இதில் ஏராளமான வழக்கறிஞர்கள் மாணவ மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிறியர்கள், கௌரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டார்கள்
கருத்துகள் இல்லை