திருவாடானை நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதமிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் முடித்து வைப்பு
திருவாடானை நீதிமன்றத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில், சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு மற்றும் கணவன் மனைவி பிரச்சனைக்கு உடனடி தீர்வு கண்டு கணவன் மனைவி சேர்ந்து வாழ்கின்றனர்
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானை நீதிமன்ற வளாகத்தில் தாலுகா வட்ட சட்ட பணிகள் இணைந்து தேசிய மக்கள் நீதிமன்றம் என்ற லோக் அதாலத் நடைபெற்றது. அதில் ஏராளமான வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. அதன் படி சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகள் 229ற்கு தீர்வு காணப்பட்டது. கிரிமினல் வழக்குகளில் தீர்வு காணப்பட்டதன் விளைவாக ரூ 29 லட்சத்து, 68 ஆயிரத்து 946 தண்டணை மற்றம் வங்கி கல்விக் கடன் வழக்குகளில் வரவானது.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா நம்புதளை கிராமத்தைச் சேர்ந்த கோமதி(25) என்பவருக்கும் அதே பகுதி படையாச்சி தெருவைச் சேர்ந்த செல்வம்(30) என்பவருக்கும் கடந்த 2016ம் தேதி இருவீட்டார் சம்மத்த்தோடு திருமணம் நடைபெற்றது. திருமண வாழ்க்கையில் கோமதி ஐந்து மாத கற்பமாக இருந்து போது பிழைப்பிற்காக செல்வம் வெசளிநாடு சென்றவர் ஊர் திரும்பவில்லை மேலும் ஆண் குழந்தை பிறந்ததையும் பாக்க வரவில்லை. அதன் பின்னர் கோமதி திருவாடானை நீதிமன்றத்தில் தனக்கும் குழந்தைக்கும் ஜீவனாம் கேட்டு வழக்கு தாக்கல் செய்த நிலையில் வழக்கு நிலுவையில் இருந்து வந்த்து. இந்நிலையில் நீதிமன்றத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நீதிபதி பாலமுருகன் தலைமையில் வழக்கறிஞர் சங்க தலைவர் வழக்கறிஞர் நாகராஜன் முன்னிலையில் கணவன் மனைவி இருவரையும் சமரசம் செய்து இருவருக்கும் உரிய அறிவுரைகள் கூறி சேர்த்து வைக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் எங்களுக்கு எவ்வித கருத்து வேறுபாடும் இருக்காது என்று கணவன் மனைவி இருவரும் ஒரு சேரக் கூறினார்கள் . இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சங்க செயலாளர் ரமேஷ், முன்னால் தலைவர் கார்த்திகேயன், மற்றும் வழக்கறிஞர் ராம் குமார் மற்றும் வழக்கறிஞர்கள், வழக்காடிகள் பலர் கலந்துகொண்டார்கள்
செய்தியாளர் : திருவாடானை தாலுகா - டvஆனந்த்
கருத்துகள் இல்லை