Header Ads

  • சற்று முன்

    வேலூர் மக்களவைத் தேர்தலுக்கு குதிரையில் வந்து வேட்பு மனு தாக்கல் செய்த நூர் முகமது


    வேலூர் மக்களவைத் தொகுதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி நடைபெறுகிறது இமையொட்டி நேற்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது நேற்று முதல் நாளே சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 8 பேர் மனு தாக்கல் செய்தனர் இதற்கிடையில் தற்போது வேலூர் தொகுதியில் மட்டும் நடக்கும் பாராளுமன்ற தேர்தல் என்பதால் தமிழகம் முழுவதும் இத்தேர்தல் பெரிதும் உற்று நோக்கப்படுகிறது.

    இதனால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுயேட்சை வேட்பாளர்கள் பலர் வித்தியாசமான முறையில் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர் அந்த வகையில் இன்று கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் குதிரை மீது சவாரி செய்தவாறு  மனு தாக்கல் செய்ய வந்த்தார். அதாவது கோவை மாவட்டத்தைச் சேர்ந்த நூர் முகமது என்பவர் ஏற்கனவே சட்டமன்றம் பாராளுமன்றம் உள்ளிட்ட தேர்தலின்போது 32 முறை போட்டியிட்டுள்ளார் 33 வது முறையாக வேலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிட இன்று அவர் வாடகை குதிரையில் மனு தாக்கல் செய்ய வந்தார் சுமார் 100 அடி தூரம் குதிரையில் வருவதற்காக 2,500 ரூபாய் கட்டணம் செலுத்தி வந்துள்ளதாக அவர் தெரிவித்தார் திடீரென குதிரையில் வந்த நபரால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது பின்னர் அவர் மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி சண்முக சுந்தரத்திடம் மனு தாக்கல் செய்து விட்டு சென்றார். 


    எமது செய்தியாளர் : வேலூர் - ராஜ ஈஸ்வரன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad