Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் மாங்கனித் திருவிழா


    கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவிலில் மாங்கனித் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    63  நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையார் இறைவன் அருளால் அதிமதுர மாங்கனியைப் பெற்று அதை தனது கணவருக்கு தந்ததாகக் கூறப்படும் நாளே மாங்கனித் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உடனுறை பூவனநாத சுவாமி கோவில் வளாகத்தில் உள்ள 63  நாயன்மார்கள் சன்னதியில் மாங்கனி வரவழைத்தல் விழா நடைபெற்றது. இதையொட்டி, 63 நாயன்மார்கள் சன்னதியில் உள்ள காரைக்கால் அம்மையாருக்கு மாங்கனிகளுடன் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. காரைக்கால் அம்மையாருக்கு மா, மஞ்சள், இளநீர், பால், தயிர், சந்தனம் உள்ளிட்ட 18  வகையான பொருள்களால் சிறப்பு அபிஷேகமும், அதைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. பூஜைகளை சுவாமிநாத பட்டர், மோகன் பட்டர் ஆகியோர் செய்திருந்தனர். பூஜையில் பங்கேற்ற பக்தர்களுக்கு மாங்கனிகள் பிரசாதமாக வழங்கப்பட்டன. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அப்பர் கண்ணுச்சாமி சிவா தொண்டர்கள் குழுவினர் செய்திருந்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad