போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த லாரி டிரைவருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிசிக்சை
திருவண்ணாமலை அருகே, போலீசார் தாக்கியதில் படுகாயமடைந்த லாரி டிரைவருக்கு, திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் தீவிர சிசிக்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கும்பகோணத்திலிருந்து வைக்கோல் சுமை ஏற்றிக்கொண்டு, வேலூர் நோக்கி லாரி ஒன்று வந்துகொண்டிருந்தது. லாரியை, சேலம் அருகே உள்ள சின்னமானை நாய்க்கன் பாளையத்தை சேர்ந்த அருள்பிரகாஷ் என்பவர் ஓட்டி வந்தார். புதன் அன்று காலை 9 மணிக்கு, வெறையூர் அடுத்த அரடாப்பட்டு கூட்டு ரோடு அருகில், லாரியில் கட்டியிருந்த கயிறு அவிழ்ந்துள்ளத. இதை கவனிக்காமல், லாரியை செலுத்தியுள்ளார். அப்போது, அங்கிருந்த காவல்துறையினர் வண்டியை தடுத்து நிறத்திய போலீசார் 5 பேர், லாரி ஓட்டுனரை கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் லாரி ஓட்டுனர் படுகாயமடைந்து மயக்கமடைந்து விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது
கருத்துகள் இல்லை