முன்விரோதம் காரணமாக வேலூரில் இளைஞர் குத்தி கொலை. 5 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
வேலூர் சைதாப்பேட்டை சுருட்டுகார முதல் தெருவை சேர்ந்தவர் தீனா என்கிற தினேஷ். இவரது நண்பர் கடந்த சில நாட்களுக்கு முன் ரத்தனகிரி அருகே கொலை செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து தனது நண்பரை கொலை செய்தவர்களை நான் கொலை செய்வேன் என தினேஷ் கூறியுள்ளார். இந்நிலையில் ரத்தினகிரி கொலை வழக்கில் சிறையில் இருந்தவர்கள் கடந்த 15 நாட்களுக்கு முன் ஜாமினில் வெளியே வந்துள்ளனர்.
பின்னர் தினேஷ் கூறியதை அறிந்து நேற்று இரவு சைதாப்பேட்டை பகுதியில் தினேஷை விரட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடியுள்ளனர். பின்னர் தகவலறிந்து வந்த வேலூர் வடக்கு காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இக்கொலை குறித்து வழக்கு பதிவு செய்து தங்கராஜ், வினோத், மணி, சத்தீஷ் என்கிற மைனா மற்றும் பழனி ஆகியோரை காவல் துறையினர் சந்தேகத்தின் பேரில் தேடிவருகின்றனர்.
எமது செய்தியாளர் ராஜ் ஈஸ்வரன்
கருத்துகள் இல்லை