கோவில்பட்டி தனியார் கல்லூரியில் 27 ஆண்டுகளுக்கு முன் படித்த மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஜீவிஎன் கல்லூரியில் தாவரவியல் பிரிவில் 1989 - 1992 வரை 27 ஆண்டுகளுக்கு முன்பு படித்த மாணவர்கள் சந்திப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கூட்டத்திற்கு முதல்வர் சாந்திமகேஸ்வரி தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்கள் தங்களது கல்லூரி கால நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
இதில் தங்களுக்கு 27 ஆண்டுகளுக்கு முன்பு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களை அழைத்து அவர்களுக்கு கௌரவப்படுத்தும் விதத்தில் நினைவு பரிசும் பொண்னாடையும் வழங்கினர். 27 ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் படித்த கல்லூரியில் தற்போது பயிலும் மாணவன் யுவராஜ் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் கஷ்டப்பட்டது தெரியவந்து அவருக்கு கல்விக்கட்டணம் முழுவதையும் முன்னாள் மாணவர்கள் ஏற்றுக்கொண்டனர். 27 ஆண்டுகளுக்கு முன்பு பாடம் பயின்ற மாணவர்களை பார்த்த மகிழ்ச்சி தருனங்களை ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மிகவும் சந்தோஷமாக அனுபவித்து அவர்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை முன்னார் மாணவர் மாரிமுத்து மாணவி அனுராதா மற்றும் பலர் செய்திருந்தனர். 27 ஆண்டுகளுக்கு பின் தங்களது கல்லூரி காலத்தை நினைவு கூர்ந்தது இவர்களுக்கு தெகிட்டாத அனுபவமான இருந்ததாக தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை