Header Ads

  • சற்று முன்

    எங்கே போகிறது மாணவ சமுதாயம்


    இதை எழுதுகின்ற நானும் கல்லூரி வாழ்க்கையை முடித்துவிட்டு தான் வந்திருக்கிறோம். அன்றும் கல்லூரிகளுக்கிடையே சண்டை சச்சரவுகள் இருக்கும் ஆனால் பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் இருக்காது. சமீப காலமாக கல்லூரி மாணவர்கள் கலாச்சாரம் சீரழிந்து வருகிறது.. இதற்கு யார் காரணம் என்று அடுத்து விடையில்லா கேள்வி எழுகிறது.பல சட்ட வல்லுநர்கள் கவிஞர்கள்  உருவாக்கியது.  பச்சையப்பன் கல்லூரி, தியாகராய கல்லூரி, மாநில கல்லூரி மற்றும் நந்தனம் கலை கல்லூரி என சென்னையில் பிரபலமான கல்லூரிகள். இந்த கல்லூரிகளில் இருந்து தான் பல அரசியல் வாதிகள் வந்துள்ளனர் என்றால் மிகையாகாது 


    இன்றைய மாணவர்கள் நாளைய இளைஞர்கள் . இந்த இளைஞர்கள் வருங்கால இந்தியாவின் தூண்கள். இன்றைய மாணவர்கள் வருங்கால பாரதத்தின் அச்சாணிகள் .   .இதை இவர்கள் போக்கில் விட்டால் மாணவ சமுதாயம்கேள்விக் குறியாகிவிடும். 

    கல்லூரி மாணவர்களிடையே அன்பு பாசம் மனித நேயம் இல்லாமல் போனதை காட்டுகிறது .ஒரு சில மாணவர்களின் தரம் கெட்ட செயல் ஒட்டுமொத்த மாணவர்களை இழிவு படுத்துகிறது. தற்போது மாணவர்களிடையே சாதி , அரசியல் ஊடுருவதாக சமூக ஆர்வலர்கள் தெருவிக்கின்றனர் .புத்தகங்களை ஏந்த வேண்டிய கையில் அரிவாள் வெட்டு கத்தியா. அறிவை தீட்ட வேண்டிய வயதில் அரிவாளை தீட்டுவதா  உங்ககளை நம்பி பெற்றோர்கள், நண்பர்கள், ஏன் வருங்கால இந்தியாவை உருவாக்க வேண்டிய மாணவர்களே சிந்தித்து பாரீர் ஒரு கணம் உங்களின் எதிர்காலத்தை நீங்களே சீர்குலைத்து விடாதீர்கள் . கல்லூரி வாழ்க்கை என்பது பசுமையானதாக இருக்கவேண்டும். கருவேலம் காடாக இருக்க கூடாது. இந்தியாவை வழி நடத்த வேண்டிய மாணவர்களே எடுப்பார் கை பாவையாக மாறவேண்டாம்.சீறிவரும் வேங்கையை போல் துணிவு இருக்க வேண்டும். அணை போட்டு தடுத்தாலும் நிற்காத காட்டாறு போல் உங்கள் அறிவு வளர வேண்டும்.


    ஆசிரியர் : ஆ.வீ.கன்னையா 



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad