முதல் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் அழகுமுத்துகோன் அவர்களின் 262 ஆவது குருபூஜை விழா திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள சந்திரலிங்கம் எதிரே நடைபெற்றது.
வெள்ளையனை எதிர்த்து வீர முழக்கமிட்ட முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்து கோன் அவர்களின் 262 வது குருபூஜை விழா 300-க்கும் மேற்பட்ட யாதவ குலத்தைச் சேர்ந்தவர்கள் பங்குபெற்ற இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. பின்னர் அழகுமுத்துகோன் அவர்களின் திருவுருவ சிலைக்கு அனைத்து யாதவர்களும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அழகுமுத்துக்கோன் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்த இளைஞர்கள் சிலைக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். முன்னதாக திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் முன் மாபெரும் பேரணி தொடங்கி நடைபெற்றது. இந்த பேரணியில் 300க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் கொடிகளுடன் கலந்து கொண்டனர். ராஜகோபுரம் எதிரே பேரணி தொடங்கியதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனத்தில் கொடிகளுடன் அணிவகுத்து நின்றனர். இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பேரணி மற்றும் குருபூஜை விழா விற்கு சிறப்பு விருந்தினர்களாக ரங்கபூபதி கல்லூரியின் தலைவர் ரங்கபூபதி, கோகுலம் மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜாராம் , மத்திய அரசு வழக்கறிஞர் ஷங்கர், வழக்கறிஞர் காளிங்கன் , தொழிலதிபர் பானுசந்தர் மற்றும் ஏராளமான யாதவர் குலத்தைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
கருத்துகள் இல்லை