Header Ads

  • சற்று முன்

    வேலூரில் சிப்பாய் புரட்சி நினைவு தினத்தை முன்னிட்டு நினைவு தூணுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி


    வேலூர்மாவட்டம்,வேலூரில் 1806 ஆம் ஆண்டு சிப்பாய் புரட்சி ஏற்பட்டது இந்த புரட்சி ஏற்படக்காரணம் அப்போது மதராஸ் படைக்கு முதன்மை தளபதியாக இருந்த ஆங்கில ஆதிக்கத்தில் சர்ஜான் கிரேடேக் என்பவன் தளபதி படையில் பல புதிய விதிமுறைகளை புகுத்தினான் அதில் இந்துக்கள் கடுக்கன் அணிய கூடாது 

    நெற்றில் எந்த இந்து சமய சின்னங்களும் இடகூடாது இஸ்லாமியர்கள் தாடியை அகற்றிவிட்டு கம்பீரமாக மீசையை வைத்துகொள்ள வேண்டும் தலையில் பசுத்தோலால் ஆன குல்லா அணிய வேண்டும் மார்பில் சிலுவை போன்ற சின்னம் அணிய வேண்டுமென வலியுறுத்தினான் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூர் கோட்டையில் ஜுலை 10 ஆம் நாள் அதிகாலை புரட்சி ஏற்பட்டு ஆங்கில அதிகாரிகளை கொன்றனர் வேலூர் கோட்டையில் ஆங்கிலேயரின் கொடியை இறக்கிவிட்டு திப்பு கொடியை ஏற்றினார்கள் இதனை அறிந்து ஆங்கிலேயர்கள் காலப்பர் துப்பாக்கி படைகளை கொண்டு வந்து கோட்டையினுள் சென்று புரட்சி செய்த இந்திய வீரர்கள் சுமார் 800-க்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர் ராணுவத்தில் இருந்த இந்திய அதிகாரிகளை தூக்கிலிட்டு கொன்றனர் ஒரே நாளில் பல இந்திய வீரர்கள் கொல்லப்பட்டதன் நினைவாக  கோட்டையின் அருகிலுள்ள மக்கான் பகுதியில் சிப்பாய் புரட்சி நினைவுத்தூண் அமைக்கப்பட்டது இந்தியாவின் முதல் சுதந்திரத்திற்கு வித்திட்டு உயிர் நீத்த இந்திய வீரர்களுக்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது இதில் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் சண்முகசுந்தரம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார்,மாவட்ட வருவாய் அலுவலர் பார்த்தீபன்  முன்னாள்   ராணுவ வீரர்கள் அரசு அதிகாரிகள் அரசியல் கட்சியினர் பொதுமக்கள் வியாபாரிகள் என அனைத்து தரப்பினரும் சிப்பாய் நினைவுத்தூணுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலியை செலுத்தினார்கள் இதில் திரளானோர் கலந்துகொண்டனர்

    செய்தியாளர் : வேலூர் - ராஜ ஈஸ்வரன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad