• சற்று முன்

    திருச்சியில் பள்ளி மாணவர்களுக்கான இலவச ஓவிய போட்டி நடை பெறுகிறது

    பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஓவியப் போட்டி திருச்சியில் ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு தங்க நாணயம் பரிசு
    ஓவியக் கலையில் ஆர்வம் உள்ள அனைவரும் பங்கு பெறலாம். அனுமதி இலவசம். அனைவரும் வருக. ஓவியக்கலை, பல்வேறு ஆக்கத்திறன்களை,உள்வாங்குவதற்கும், ஆவணப்படுத்துவதற்கும், வெளிப்படுத்துவதற்குமான உன்னத கலையாகும். ஓவியக்  கலையினை இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு சேர்க்கும் விதமாக டிசைன் ஓவியப்பள்ளி இரண்டு நாள் ஓவியப்போட்டியினை திருச்சியில் நடத்துகிறது.

    ஜூலை 27 ,28 ஆம் தேதி நடைபெறும் ஓவியப்போட்டியானது, திருச்சி , மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ரம்யாஸ் ஹோட்டல், சௌபாக்யா  ஹாலில் காலை 11-30 மணி முதல் மாலை 4-30 மணி வரை நடைபெறும். போட்டியில் பங்கேற்க கூடிய பள்ளி மாணவ-மாணவிகள் இரண்டு நாட்களில் ஏதேனும் ஒரு மணி நேரத்தில்  பங்கேற்கலாம். போட்டி நேரம் ஒரு மணி நேரம் ஆகும்.
    நான்கு பிரிவாக நடைபெறும் ஓவியப்போட்டியில் எல்கேஜி ,யுகேஜி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு வண்ணம் தீட்டுதல், முதலாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு பிடித்த சாக்லேட் ஓவியம் வரைந்து வண்ணம் தீட்டவும், நான்காம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை எதிர்காலத்தில் நீர் தேவை குறித்து ஓவியம் வரைந்து வண்ணம்  தீட்டவும்,  ஏழாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை மனித வாழ்க்கையில் தேனீயின் முக்கிய பங்கு குறித்து ஓவியம் வரைந்து வண்ணம் தீட்ட வேண்டும். போட்டியில் பங்கேற்க கூடிய மாணவ மாணவிகள் பள்ளி சீருடையுடனும், அடையாள அட்டையுடனும்   பங்கேற்க வேண்டும்.

    போட்டி பங்கேற்பாளர்கள் ஓவியத்திற்கான உபகரணங்களை சொந்தப் பொறுப்பில் கொண்டு வரவேண்டும்.பெற்றோர்கள், பாதுகாவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் துணையுடன்  மாணவர்கள் சொந்தப் பொறுப்பில் வந்து செல்ல வேண்டும். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்றமைக்காக சான்றிதழ் வழங்கப்படும். சிறந்த ஓவியமாக நடுவர்களால் தேர்வு செய்யப்படும் ஓவியக் கலைஞர்களுக்கு பாராட்டுச் சான்றிதழும், பரிசுகளும் வழங்கிக் கௌரவிக்கப்படும்.நடுவரின் முடிவே இறுதியானதாகும். சிறந்த ஓவியத்திற்கு தங்க நாணயம் பரிசாக வழங்கிக் கௌரவிக்கப்படும். டிசைன்  ஓவியப்பள்ளி தாளாளர் மதன், இயக்குனர் நஸ்ரத் பேகம் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்து வருகிறார்கள்

    மேலும் விபரங்களுக்கு 9842299412, 9566673472 அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad