• சற்று முன்

    உயர் சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு கோரி ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணாவில் ஈடுபட்ட நபர்.


    வேலூர் மாவட்டம் அணைகட்டு ஊசூரை சேர்ந்தவர் அஜித்குமார்  என்ற இளைஞர். இவர் சஸ்தி சேனா இந்து மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர். உயர் சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு கேட்டு வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் காலை 10.00 மணிக்கு வந்துள்ளார். இன்று வேட்புமனு தாக்கல் என்பதல் ஆட்சியரை பார்க்க அஜித்குமாரை காவல் துறை அனுமதிக்கவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த அஜித்குமார் ஆட்சியர் வளாகத்திலேயே படுத்து கோஷம் மீட்டார். பின்னர் அவரை காவல் துறையினர் சமாதானம் செய்து அழைத்து சென்று மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் தாட்சாயணிடம் மனுகொடுக்க வைத்ததையடுத்தனர். இதனையடுத்து அஜித்குமார் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

    இதன் காணொளி காட்சியை NMS TODAY You Tube பார்க்கவும் . 
    எமது செய்தியாளர் : வேலூர் - ராஜ ஈஸ்வரன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad