வேலூரில் திமுக எம்எல்ஏ நந்தகுமார் தொகுதி பொதுமக்களுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று வழக்கம் போல் திங்கள்கிழமை குறை தீர் முகாம் நடைபெற்று வந்தது இந்நிலையில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதி திமுக எம்எல்ஏ நந்தகுமார் தனது தொகுதி பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார்.
திமுக நடத்திய கிராமசபை கூட்டங்களில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப் போவதாக தெரிவித்தார் அதன்படி குறைதீர் முகாமிற்க்கு வந்த மாவட்ட ஆட்சியரை சந்தித்து தொகுதி பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 1952 மனுக்களை கட்டுகளாக சட்டமன்ற உறுப்பினர் நந்தகுமார் வழங்கினார். அப்போது நாங்கள் நடத்திய கிராம சபைக் கூட்டங்களில் பொதுமக்கள் எங்களிடம் வந்து குடிநீர் பிரச்சனை கழிவுநீர் பிரச்சனை மின் இணைப்பு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மனுக்களாக வழங்கினாரகள்.
எனவே மக்கள் நலன் கருதி மனுவில் உள்ள அனைத்து பிரச்சனைக்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரை வலியுறுத்தினார் மனுவை வாங்கிய மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். சுமார் 200க்கும் மேற்பட்ட பொதுமக்களை திரட்டி எம்எல்ஏ மனு அளிக்க வந்த சம்பவம் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்படுத்தியது
கருத்துகள் இல்லை