காட்பாடி திருவள்ளூர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரியில் 122 கௌரவ விரிவுரையாளர்கள் பணிநீக்கம் செய்ததால் திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளரிடம் மனு வழங்கினார்.
காட்பாடி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் நான்கு உறுப்புக் கல்லூரியில் தற்காலிகமாக பணியாற்றிய 122 கௌரவ விரிவுரையாளர்கள் முன்னறிவிப்பு இன்றி பணி நீக்கம் செய்ததால் பாதிக்கப்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் மீண்டும் பணி வழங்க கோரி திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளரிடம் மனு அளித்தனர்
காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் தமிழக அரசுக்கு சொந்தமான திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கட்டுபாட்டில் வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் 130 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகிறது. இந்த நிலையில் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரக்கோணம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திட்டக்குடி ஆகிய நான்கு உறுப்புக் கல்லூரியில் தற்காலிகமாக பணியாற்றிய வந்த 122 கௌரவ விரிவுரையாளர்களை பல்கலைகழகம் எந்த வித முன்னறிவிப்பு இன்றி பணி நீக்கம் செய்துள்ளது இதனால் தங்களின் குடும்ப சூழ்நிலை மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பாதிக்கப்பட்ட அரக்கோணம், திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, திட்டக்குடி ஆகிய நான்கு உறுப்புக் கல்லூரியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கௌரவ விரிவுரையாளர்கள் மீண்டும் பணி வழங்க கோரி திருவள்ளுவர் பல்கலைக்கழக பதிவாளலரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
கருத்துகள் இல்லை