• சற்று முன்

    அரக்கோணம் பெண் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவா லஞ்சம் வாங்கியதாக கைது


    அரக்கோணத்தில் வீட்டு மனை சான்றுக்கு அங்கீகார அனுமதி அளிக்க ரூபாய் 56 ஆயிரத்து 600 லஞ்சம் வாங்கிய துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ரயில் நிலையத்தில் கையும் களவுமாக கைது

    வேலூர் மாவட்டம் அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி  அலுவலராக பணியாற்றுபவர் ஜீவா(பெண்) இவரிடம் சென்னையைச் சேர்ந்த முத்து ராஜ் என்பவர் வீட்டு மனைகள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார் இவர் அரக்கோணம் அருகே மோசூர் என்ற இடத்தில் இடம் வாங்கி அதனை வீட்டு மனைகளாக பிரித்து விற்பனை செய்ய திட்டமிட்டு அதற்காக வீட்டுமனைகள் அங்கீகார அனுமதி வழங்க வேண்டுமென துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவாவிடம் கேட்டுள்ளார் அதற்கு அவர் மனை அங்கீகாரத்திற்கு ரூபாய் 70 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். பின்னர் ரூபாய் 50 ஆயிரத்து 600 கடைசியாக லஞ்சமாக கொடுத்தால் அங்கீகாரம் செய்வதாக உறுதியாகக் கூறியுள்ளார் இதனால் முத்துராஜ் வேலூரில் உள்ள லஞ்ச ஒழிப்பு காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார் அதன் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை முத்துராஜ் இடம் கொடுத்து அதனை ஜீவாவிடம் கொடுக்க ஆலோசனை கூறியுள்ளனர் இதன் அடிப்படையில் லஞ்சப்பணம் ரூபாய் 50 ஆயிரத்து 600 அரக்கோணம் ரயில் நிலையத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜீவாவிடம் கொடுத்தபோது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ஜீவாவை கையும் களவுமாக கைது செய்தனர் மேலும் லஞ்ச ஒழிப்பு ஆய்வாளர் விஜய் தலைமையிலான காவல்துறையினர் லஞ்சம் பெற்ற அதிகாரியை தனி அறையில் வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

    செய்தியாளர் : ராஜேஸ்வரன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad