• சற்று முன்

    பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் : காயல் அப்பாஸ் வலியுறுத்தல் !

    ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது. 

    திருவள்ளுர் மாவட்டம். பூந்தமல்லியில் மூத்த பத்திரிக்கையாளர் வி அன்பழகன் அவர்களை இன்று இரவு 7.30 மணியளவில் TN 12 AB 8789 இரு சக்கரம் வாகனத்தில் வந்து கொலை செய்ய முயற்சியில் ஈடுபட்டவர்களை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வண்மையாக கண்டிக்கிறது. தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் மீது தாக்குதல் கொலை முயற்ச்சி இது போண்ற சம்பங்கள் தொடர்ந்த வண்ணமாக உள்ளது. இது போண்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க தமிழக அரசு சிறப்பு கவணம் செலுத்தி உரிய நடவடிக்கையை மேற் கொள்ள வேண்டுமென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுறுத்துகிறது.  நாட்டின் நான்காவது தூணாக கருதபடும் பத்திரிக்கை சுதந்திரம் நசுக்கபடுவது மிகுந்த வருத்ததை அளிக்கிறது.. பத்திரிக்கை சுதந்திரத்தை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே : மூத்த பத்திரிக்கையாளர் வி .அன்பழகன் மீது கொலை முயற்சியில் ஈடு பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து உடனடியாக கைது செய்ய வேண்டும். வி.அன்பழகனுக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும். பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad