• சற்று முன்

    வேலூர் கோட்டை மைதானத்தில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முன்னிலையில் சர்வதேச யோகா தினம் கொண்டாப்பட்டது


    வேலூரில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ராமன் தலைமையில் கோட்டை பூங்காவிலும் -காவலர்களுக்கான யோகா - காவல்துறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார் தலைமையில் நேதாஜி விளையாட்டரங்கிலும் நடைபெற்றது ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு வேலூர் மாவட்டம்,வேலூர் கோட்டை பூங்காவில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் சார்பில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ராமன் தலைமையில் நடைபெற்றது இதில் அவரும் கலந்துகொண்டு ஆயிரக்கணக்கான மாணவ,மாணவிகளுடன் யோகா செய்தனர் இதில் இந்திய செஞ்சிலுவை சங்க செயலாளர் இந்திரநாத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர் இதே போன்று சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நேதாஜி விளையாட்டரங்கில் காவலர்களுக்கான யோகா நிகழ்ச்சி நடைபெற்றது 

    இதில் காவல்துறை வேலூர்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ்குமார்  உள்ளிட்டோர் கலந்துகொண்டு யோகா செய்தார் இதில் காவலர்கள் ஆர்வமுடன் யோகா செய்தனர் இதே போன்று மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் சர்வதேச யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

    செய்தியாளர் : ராஜேஸ்வரன் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad