மூன்று மாதங்களாக தண்ணீர் வழங்காததால் ஆத்திரம் அணைக்கட்டு அருகே பொதுமக்கள் சாலை மறியல்
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது கோடை மழை பொய்த்ததால் இங்கு நிலத்தடி நீரும் அதாள பாளத்துக்கு சென்று விட்டது இதனால் பொதுமக்கள் அன்றாட தேவைக்கு கூட தண்ணீர் இல்லாமல் தினம் தினம் இன்னல் பட்டு வருகின்றனர் தாகத்தைத் தீர்க்க குடிநீர் கேட்டு வேலூர் மாவட்டத்தில் தினம் தினம் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் சாலை மறியல் செய்யும் சம்பவம் வாடிக்கையாகி நடந்து வருகிறது இந்த நிலையில் வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அருகே மருதவள்ளி பாளையம் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களாக குடிநீர் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது இது தொடர்பாக அப்பகுதி பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இன்று திடீரென அணைக்கட்டு ராமபுரம் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியல் செய்தனர் அப்போது அந்த வழியாக சென்ற ஜேசிபி வாகனத்தை பொதுமக்கள் சிறைப்பிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது இதில் பெண்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு, " வேண்டும் வேண்டும் தண்ணீர் வேண்டும்" என்று முழக்கமிட்டனர். வழக்கமாக இது போன்று பொதுமக்கள் சாலை மறியல் செய்தால் தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடம் சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைப்பார்கள் ஆனால் இன்று போலீசார் மற்றும் அதிகாரிகள் யாருமே வராததால் பொதுமக்கள் நீண்ட நேரம் சாலை மறியல் செய்து விட்டு மிகுந்த ஏமாற்றத்துடன் அங்கிருந்து கலைந்து சென்றனர் தங்களின் அன்றாட தேவைக்காக போராடும் போது அதை காது கொடுத்து கேட்க கூட அதிகாரிகள் யாரும் வராத சம்பவம் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி இருப்பதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை