• சற்று முன்

    அரக்கோணம் இந்திய கடற்படை விமான தள வளாகத்தில் 92வது ஹெலிகாப்டர் பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது…


    வேலூர் மாவட்டம் அரக்கோணத்தில் இந்திய கடற்படை விமான தளம் இயங்கி வருகிறது. இங்குள்ள ஹெலிகாப்டர் பயிற்சி பள்ளியில் 21 வாரங்கள் பயிற்சி மேற்க்கொண்ட 7 கடற்படை விமானிகளுக்கான பயிற்சி நிறைவு விழா. கடற்படை விமான தள வளாகத்தில் ராஜாளி கமாண்டர் கேப்டன் ஸ்ரீரங் ஜோகில்கர் தலைமையில் நடைபெற்றது. இதில் கோவா பிராந்திய கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் பிலிபோஸ் ஜார்ஜ் பினுமூட்டில் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு திறந்த ஜீப்பில் நின்றவாறு வீரர்களின் அணிவகுப்பை பார்வையிட்டார். 

    பின்னர் வீரர்கள் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.. பயிற்சி முடித்த 7 கடற்படை விமானிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் பயிற்சியில் அனைத்து பிரிவுகளில் சிறப்பாக விளங்கிய லெப்ட்னெண்ட் நைசன் மார்க்ரோஸ் க்கு கேரளா ஆளுநர் சுழற்கோப்பை மற்றும் கிழக்கு பிராந்திய சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. அதே போல் சப்லெப்ட்னெண்ட் ஸ்ரீராமுக்கு புக் பரிசும் வழங்கப்பட்டது. பின்னர் சிறப்புரையாற்றிய கோவா பிராந்திய கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் பிலிபோஸ் ஜார்ஜ் பினுமூட்டில் பயிற்சி மேற்கொண்ட வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என வாழ்த்துக்களை தெரிவித்தார்..நிகழ்ச்சியில் அதிகாரிகள், மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்றனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad