பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு சேகரிப்பு கலை அறிவு திறன் போட்டி
திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்கம் சார்பில் உலகப் பணத்தாள்கள், நாணயங்கள், தபால் தலைகள் மற்றும் பழங்கால பொருட்கள் கண்காட்சி திருச்சியில் நடைபெற்றது சேகரிப்புக் கலையினை இளம் தலைமுறையினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் அறிவுத்திறன் போட்டி நடத்தப்பட்டது போட்டியில் தபால் தலைகள், நாணயங்கள், பணத்தாள்கள், பழங்கால பொருட்கள் குறித்த வினா கேட்கப்பட்டு சிறப்பாக விடையளித்த மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் பர்னிச்சர் நிறுவனத்திலிருந்து செல்வ மனோரஞ்சன் கடல்மலர்மன்னன் உள்ளிட்டோர் பாராட்டு சான்றிதழும், பரிசுகளும் வழங்கினர் திருச்சிராப்பள்ளி பணத்தாள்கள் சேகரிப்போர் சங்க தலைவர் விஜயகுமார், செயலர் குணசேகர், பொருளாளர் அப்துல்அஜீஸ், முகமது சுபேர், பாண்டி, கமலக்கண்ணன், சந்திரசேகரன் உள்ளிட்ட நிகழ்ச்சி ஒருங்கினைப்பாளர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்திருந்தனர்
கருத்துகள் இல்லை